பாத் பள்ளியின் பொங்கல் திருவிழா-2020:-
*நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையிலே நினைக்கும் போதே சக்தி தரும் தி பாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா 11.01.2020 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
*காலை 9.00 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் இனிதே தொடங்கியது.
*இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் திரு.வே. நெடுஞ்செழியன் அவர்களும், சண்முகா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் திரு.இரா. சங்கர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
* இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கண்கவரும் கலைநிகழ்ச்சிகளான வரவேற்பு நடனம், பொங்கல் சிறப்புப் பேச்சு, கிராமிய நடனம், பொங்கல் சிறப்புப் பாடல், பாரம்பரிய விளையாட்டை பறைசாற்றும் தமிழ் நாடகம், மேற்கத்திய நடனம், கலாச்சார நிகழ்வான உறியடித்தல் என கிராமிய சூழல் நம்மை மகிழச் செய்தது.
* சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முதல்வர் துணை முதல்வர் ஆகியோரின் பொங்கல் வாழ்த்துகள் மனதை மகிழ்ச்சி படுத்தியது.
* பள்ளி வளாகத்தில் தமிழ்க்குடில் அமைத்து, தனித்தனியே வண்ணக் கோலமிட்டு, வாழையும் தென்னையும் வகையாய் பிரித்தெடுத்து மாவிலைத் தோரணத்தோடு மங்கல இசையில் மனமகிழ் திடலாகக் காட்சியளித்தது.
* பூமித்தாயை வணங்கியே புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்பும் மஞ்சளும் சேர்த்து மங்கலமாய் நடந்தது.
* இந்நிகழ்வின் இறுதியாக மண்மணம் மாறாத மாண்புகளுடன் மாட்டுவண்டிப் பயணத்தில் நம் மழலைகளின் உல்லாச ஊர்வலம் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
“ அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் “